ADDED : ஜூலை 31, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முதலியார்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
முதலியார்பேட்டை தொகுதி, சாமிநாதப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று நடந்த சாகை வார்த்தல் நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பக்தர்களுக்கு கூழ் வழங்கினார். நிகழ்ச்சியில் பா.ஜ., வில்லியனுார் தொகுதி பொறுப்பாளர் வெற்றிச்செல்வம் , சுகுமாரன் மற்றும் கோவில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
