/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய அளவில் தற்கொலை மரணங்கள் புதுச்சேரிக்கு மூன்றாம் இடம்
/
தேசிய அளவில் தற்கொலை மரணங்கள் புதுச்சேரிக்கு மூன்றாம் இடம்
தேசிய அளவில் தற்கொலை மரணங்கள் புதுச்சேரிக்கு மூன்றாம் இடம்
தேசிய அளவில் தற்கொலை மரணங்கள் புதுச்சேரிக்கு மூன்றாம் இடம்
ADDED : செப் 11, 2024 02:05 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு தேசிய மனநல திட்டம் சார்பில், சர்வதேச தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணி முக்கிய வீதிகளில், தற்கொலைத் தடுப்பு முழக்கங்களுடன், பதாகைகளை தாங்கி, செவிலிய மாணவர்கள் ஊர்வலம் சென்றனர்.
இதில் பல்வேறு செவிலியர் கல்லுாரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, இந்திராகாந்தி பட்டமேற்படிப்பு கருத்தரங்கு கூடத்தில் தற்கொலை தடுப்பு சம்பந்தமான கருத்தரங்கு நிகழ்ச்சி நடந்தது. மன நல திட்ட அதிகாரி பாலன் பொன்மணி ஸ்டீபன் வரவேற்றார். கதிர்காமம், இந்திராகாந்தி மருத்துவக்கல்லுாரி மனநல டாக்டர் மதன் மற்றும் மனநல டாக்டர் கெஜலட்சுமி, மாணவர்களிடம் கலந்துரையாடினர்.