/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத அரசு ஒதுக்கீடு முதல்வரிடம் நேரு கோரிக்கை
/
மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத அரசு ஒதுக்கீடு முதல்வரிடம் நேரு கோரிக்கை
மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத அரசு ஒதுக்கீடு முதல்வரிடம் நேரு கோரிக்கை
மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத அரசு ஒதுக்கீடு முதல்வரிடம் நேரு கோரிக்கை
ADDED : ஆக 22, 2024 01:49 AM

புதுச்சேரி, : பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் சென்று, முதல்வர் ரங்கசாமியிடம், நேரு எம்.எல்.ஏ., நேற்று மனு அளித்தார்.
அதில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள், தனியார் மருத்துவ கல்லுாரிகளிடம் இருந்து, 65 முதல் 85 சதவீதம் வரை இடங்களை பெற்று மருத்துவ மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும், 35 சதவீதத்திற்கு கீழ் மருத்துவ மாணவர்களுக்கு இடம் வழங்கப்படுவது, அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் கூடுதலாக மருத்துவ இடங்களை பெற்று நம் மாநில மருத்துவ மாணவர்களுக்கு இடங்கள் அளிக்காமல் தனிப்பட்ட முறையில் பல நுாறு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர்.
இதன் மூலம் புதுச்சேரி மாநில மருத்துவ மாணவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். மருத்துவ கல்லுாரி தொடங்கி நிகர்நிலை பல்கலைகழகங்களாக மாற்றிக்கொண்டு நம் மாநில மாணவர்களுக்கு இடம் கொடுக்காத நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன் அவர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடங்களை மீட்டெடுக்க வேண்டும்.
புதுச்சேரி மருத்துவ மாணவர்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதுடன், தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே அரசு ஒதுக்கீடாக, 50 சதவீதத்திற்கு மேலான இடங்களை பெற்று மாணவர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.