/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்து வழங்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
/
மாநில அந்தஸ்து வழங்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
மாநில அந்தஸ்து வழங்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
மாநில அந்தஸ்து வழங்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : ஆக 15, 2024 05:04 AM
புதுச்சேரி: சட்டசபையில்புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்டு நேரு எம்.எல்.ஏ., தனி நபர் தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது;
பிரஞ்சு ஆட்சியின் கீழ் புதுச்சேரி இருந்தபோது மக்களை அடக்குமுறை அல்லாத ஆட்சி செய்துள்ளது. பல பஞ்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்பு உருவாக்கியதுடன், பஞ்சாலைக்கு தேவையான மூலப்பொருள் கொண்டுவர மற்றும் ஏற்றுமதி செய்ய ரயில் பாதை ஏற்படுத்தினர்.
அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, புதுச்சேரி பிரஞ்சு அரசின் ஜன்னலாக இருக்கும். புதுச்சேரிக்கு தனி பல சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அதன் மூலம் பிரஞ்சு அரசு புதுச்சேரியை எப்படி செல்வ செழிப்பாக வைத்திருந்தது என தெரிகிறது. இன்று மத்திய அரசு புதுச்சேரியை நடத்துவதை பார்த்தால் வேதனையாக உள்ளது.
சட்டசபை கட்ட கவர்னர், தலைமை செயலக அதிகாரிகள் தடையாக இருக்கிறார்கள். ஒரு தொழில் நிறுவனம் கொண்டுவர மத்திய அரசு அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைக்காமல் பல திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளது.
மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். புதுச்சேரிதனி தன்மையுடன் விளங்கதனி மாநில அந்தஸ்து பெற்று ஆக வேண்டும்.அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கோவா, மிசோராம், சிக்கிம் போன்ற சிறிய மாநிலங்களுக்கு மாநில அந்தஸ்து கொடுத்தது போல் புதுச்சேரிக்கு அளிக்க வேண்டும். நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.
புதுச்சேரியை மத்திய அரசு வஞ்சிக்கிறது. இதற்கெல்லாம் ஒரு தீர்வு தனி மாநில அந்தஸ்து ஒன்று தான்.அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டில்லி சென்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கூறினார்.