/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் அவமான சின்னமாக உப்பனாறு சட்டசபையில் நேரு எம்.எல்.ஏ., வேதனை

ADDED : ஆக 13, 2024 05:02 AM
புதுச்சேரி: புதுச்சேரியின் அவமான சின்னமாக உப்பனாறு மாறி விட்டது என நேரு எம்.எல்.ஏ., பேசினார்.
ஜீரோ நேரத்தில் அவர் பேசியதாவது:
புதுச்சேரியில் ஒரு எழில்மிகு சிறிய ஆறாக ஓடி கொண்டிருந்த இந்த உப்பனாறு தற்போது கழிவுநீர் கலக்கும் ஆறாக மாறி அது துர்நாற்றத்துடனும், பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலையில் உள்ளது. இந்த உப்பாற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மன்றாடுகின்றனர். நானும் அது சம்மந்தமாக கடந்த பல ஆண்டுகளாக சட்டசபை, பொதுப்பணித்துறையிலும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கடிதம் மூலமும்,நேரிலும் விவாதித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
இந்த உப்பனாறு வாய்க்கால் தற்போது மிகவும் அருவருக்கதக்க வகையிலும், துர்நாற்றத்துடன் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. பல நோய்கள் பரப்பகூடிய இடமாக விளங்கி வருகிறது.
இதற்கு எந்த தீர்வும் இல்லாததால் இந்த வாய்க்கால் புதுச்சேரி மாநிலத்திற்கு ஒரு அவமான சின்னமாக இருக்கிறது. கடந்த இரண்டு நாட்கள் இரவில் பெய்த மழையால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் உடமைகள் பாதிப்புக்கு உள்ளாகி பொருட்களை இழந்திருக்கிறார்கள்.
ஜீவானந்தபுரம் ஓடையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த ஐய்யப்பன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.