/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அண்ணா திடலில் புதிய கடைகள் நேரு எம்.எல்.ஏ., ஆய்வு
/
அண்ணா திடலில் புதிய கடைகள் நேரு எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : பிப் 22, 2025 04:53 AM

புதுச்சேரி: அண்ணா திடலில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய கடைகள் அமைக்கும் பணியை, நேரு எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அண்ணா திடல் விளையாட்டு மைதானம் மேம்படுத்துதல், திடலை சுற்றியுள்ள சின்னசுப்பிராய பிள்ளை வீதி, லப்போர்த் வீதி மற்றும் அண்ணா சாலை பகுதியில் புதிதாக கடைகள் கட்டப்பட்டு வருகிறது.
கட்டுமான பணிகள் முடியும் நிலையில் உள்ளது. கடைகள் அமைக்கும் பணிகளை, நேரு எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடித்து, திட்டமிட்டபடி முன்பு கடை நடத்தியவருக்கே மீண்டும் கடைகளை ஒப்படைக்க வேண்டும் என, அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் கந்தசாமி, ஸ்மார்ட் சிட்டி திட்ட தொழில்நுட்ப அதிகாரி ரவிச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.