/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பனாறு பாலத்தை அகற்ற நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
உப்பனாறு பாலத்தை அகற்ற நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
உப்பனாறு பாலத்தை அகற்ற நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
உப்பனாறு பாலத்தை அகற்ற நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : பிப் 22, 2025 10:32 PM
புதுச்சேரி : உப்பனாறு பாலத்தை அகற்ற வேண்டும் என, நேரு எம்.எல.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
உருளையன்பேட்டை தொகுதி காமராஜர் சாலையில் இருந்து மறைமலை அடிகள் சாலை வரை உப்பனாறு பால பணிகள் திட்டமிடாமல் துவங்கப்பட்டது. இதனால் உப்பனாற்றில் நீர் வழிப்பாதை தடுக்கப்பட்டு மழைக்காலங்களில் கடும் பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தியது.
இந்த உப்பனாற்றில் கழிவு நீர் தேங்கி சேறும் சகதிமாகியுள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன் அங்கு வசிக்கும் மக்களுக்கு சுவாசகோளாறு, டெங்கு நோய், மலேரியா போன்ற நோய் தாக்கம் ஏற்பட்டு உயிரிழப்புக்குள்ளாகினர்.
வாய்க்காலை சுத்தப்படுத்தாமல் இருப்பதால் விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாக இந்த வாய்க்கால் மாறிவிட்டது. இதனால் தொகுதி மக்கள் அதிகாரிகள் மீது வெறுப்படைந்துள்ளனர்.
எனவே உப்பனாறு ஓடையின் மேல் திட்டமிடல் இல்லாமல் துவங்கப்பட்ட பாலம் கட்டுமானத்தை அகற்ற வேண்டும். மழை நீர் எந்தவித தடையும் இல்லாமல் எளிதாக செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.