தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நெல்லித்தோப்பு கழிவுநீர் வாய்க்கால்: துார்வார நடவடிக்கை தேவை

நெல்லித்தோப்பு கழிவுநீர் வாய்க்கால்: துார்வார நடவடிக்கை தேவை

நெல்லித்தோப்பு கழிவுநீர் வாய்க்கால்: துார்வார நடவடிக்கை தேவை


UPDATED : ஜூன் 30, 2026 09:26 PM

ADDED : ஜூன் 30, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2026 09:26 PM ADDED : ஜூன் 30, 2026 06:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நெல்லித்தோப்பு கே.சி. நகர். கழிவுநீர் வாய்க்கால் துார் வராமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட அண்ணா நகர் அருகில் கே.சி., நகர் உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியையொட்டி கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது.

இந்திரா சதுக்கம், நெல்லித்தோப்பு, அண்ணா நகர் பகுதியில் இருந்து வரும் கழிவு நீர், மழைநீர் இந்த வாய்க்கால் வழியாக நெல்லித்தோப்பு முத்தமிழ் நகர் வாய்க்காலில் இணைக்கும் முக்கிய வாய்க்கலாக உள்ளது.

இந்த கழிவுநீர் வாய்க்கால் துார் வராமல் இருப்பதால், பல இடங்களில் குப்பைகள் அடைத்துள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

திறந்த வெளியில் செல்லும் இந்த வாய்க்காலுக்கு, சிமென்ட் சிலாப் அமைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். மழைக்காலம் வருவதால், முன்னதாகவே பொதுப்பணித்துறையினர் வாய்க்காலை துார்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us