/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுக்கு பணம் கொடுத்து விட்டு தப்பிச் சென்ற 3 பேருக்கு வலை
/
ஓட்டுக்கு பணம் கொடுத்து விட்டு தப்பிச் சென்ற 3 பேருக்கு வலை
ஓட்டுக்கு பணம் கொடுத்து விட்டு தப்பிச் சென்ற 3 பேருக்கு வலை
ஓட்டுக்கு பணம் கொடுத்து விட்டு தப்பிச் சென்ற 3 பேருக்கு வலை
ADDED : ஏப் 18, 2024 11:34 PM
அரியாங்குப்பம் : ஓட்டுக்கு பணம் கொடுத்துவிட்டு தப்பியோடிய 2 பெண்கள் உட்பட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் இன்று லோக்சபா தேர்தல் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம், புதுகுப்பம் பகுதியில், மக்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது, இரண்டு பெண்கள், பணம், ஓட்டு சீட்டுகளை அப்பகுதியில் மக்களுக்கு வழங்கினர்.
போலீசாரை கண்டு இருவரும் ரூ. 15 ஆயிரம் பணம் மற்றும் ஓட்டு சீட்டுகளை சாலையில் வீசி விட்டு, தப்பி சென்றனர்.
அதே போன்று, அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், பணம் கொடுப்பதாக வந்த தகவலை அடுத்து, அரியாங்குப்பம் போலீசார் அங்கு சோதனை நடத்தினர்.
போலீசாரை கண்ட வாலிபர் ஒருவர் 50 ஆயிரம் பணம், ஓட்டு சீட்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றார்.
அவர்கள் மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

