ADDED : ஆக 10, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி, ஆக. 11–
கட்டட தொழிலாளியை மிரட்டிய சகோதரர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி, லாஸ்பேட் கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜன்,39; கட்டட தொழிலாளி. இவர் வீட்டருகே வசிக்கும் சக்திவேல், நேற்று முன்தினம் மதுபோதையில், ஆபாசமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அதனை ராஜன் கண்டித்தார்.
அதில், ஆத்திரமடைந்த சக்திவேல், அவரது தம்பி சீனு ஆகியோர் வீடு புகுந்து கத்தியை காட்டி, போலீசில் புகார் கொடுத்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். அதற்குள், அக்கம் பக்கத்தினர் அங்கு கூடவே, இருவரும் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ராஜன் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சக்திவேல், சீனு ஆகியோரை தேடிவருகின்றனர்.
