/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாகன கண்ணாடி உடைப்பு மர்ம நபர்களுக்கு வலை
/
வாகன கண்ணாடி உடைப்பு மர்ம நபர்களுக்கு வலை
ADDED : மே 30, 2024 04:55 AM

புதுச்சேரி: வீட்டு வாசலில் நின்ற லோடு கேரியர் வாகன கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ரெட்டியார்பாளையம், சத்தியசாய் நகர், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பானுரவி, 57. இவர், பொலிரோ (பி.ஒ., 01 பி.ஏ.2194) என்ற லோடு கேரியர் வாகனத்தை ஓட்டி வருகிறார்.
நேற்று வாகனத்தை தனது வீட்டு எதிரே நிறுத்தி வைத்திருந்தார். மதியம் 3:00 மணியளவில், வாகனத்தை எடுக்க சென்ற போது, வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.
அந்த பகுதியில் மது குடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் யாராவது, வாகனத்தின் கண்ணாடியை உடைத்திருக்கலாம் என அப்பகுதியில் குடியிருப்பவர்கள் தெரிவித்தனர். இதுறித்து, பானுரவி கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார், வாகன கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.