/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெயிண்டரை தாக்கிய உறவினருக்கு வலை
/
பெயிண்டரை தாக்கிய உறவினருக்கு வலை
ADDED : மே 30, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன், 40; பெயிண்டர். இவரது பக்கத்து வீட்டில் உறவினர் பார்த்திபன் வசிக்கிறார். பார்த்தீபன் வீட்டு மாமர கிளை, அய்யனாரப்பன் வீட்டின் பக்கம் சாய்ந்து வளர்ந்துள்ளது.
இதனால் கடந்த 25ம் தேதி, தன் வீட்டின் பக்கம் சாய்துள்ள மரக்கிளையை வெட்டி அகற்றுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பார்த்தீபனின் மருமகன் உமாதிபதி, நேற்று முன்தினம் இரவு அய்யனாரப்பனை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அய்யனாரப்பன் அளித்த புகாரின்பேரில் உமாபதி மீது கோரிமேடு போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.