வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நியூரோ சயின்ஸ் துறை திறப்பு
வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நியூரோ சயின்ஸ் துறை திறப்பு
ADDED : ஆக 08, 2026 05:50 PM
புதுச்சேரி: புதுச்சேரி வெஸ்ட்மெட் மருத்துவமனை வளாகத்தில், நியூரோ சயின்ஸ் துறையை நாராயணசாமி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
ரெட்டியார்பாளையம் பகுதியில் வெஸ்ட்மெட் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் மூளை, முதுகுத்தண்டு, நரம்பு தொடர்பான நோய்களுக்கு ஒருங்கிணைந்த, நவீன மற்றும் முழுமையான சிகிச்சையை வழங்குவதற்கான நியூரோ சயின்ஸ் துறை துவங்கப்பட்டுள்ளது.
இந்த துறையின் துவக்க விழாவிற்கு, உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ., நாராயணசாமி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். வெஸ்ட்மெட் மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் அருள்மணி வரவேற்றார்.
நிர்வாக இயக்குநர் ராஜஸ்ரீ, டாக்டர்கள் சந்தோஷ், சண்முகாபதி, ேஷாபனா, வசந்தராஜ், அருள்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிதாக துவங்கிய நியூரோ சயின்ஸ் துறையில், நியூரோ அறுவை சிகிச்சைகளான மூளை மற்றும் முதுகுதண்டு அறுவை சிகிச்சை, அவசரகால நரம்பியல் அறுவை சிகிச்சை, முதுகுதண்டு, மூளைகட்டி மற்றும் பக்கவாதம் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.
மேலும் நியூரோ மருத்துவம், நியூரோ ரேடியாலஜி, நியூரோ பிசியோதெரபி சிறப்பு பிரிவுகளும் இந்த மருத்துவமனையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
