/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய குற்றவியல் சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
புதிய குற்றவியல் சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 02, 2024 05:20 AM

பாகூர்: கிருமாம்பாக்கம், பாகூர் போலீஸ் நிலையங்களில், புதிய குற்றவியல் சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் கணேசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தெற்கு போக்குவரத்து போலீஸ் எஸ்.பி., மோகன்குமார் கலந்து கொண்டு, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விளக்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் படுகு கனகராஜ், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்கள், நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர், மகளிர் சுய உதவி குழுவினர், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், உதவி சப் இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், கிருமாம்பாக்கம், பாகூர் போலீஸ் நிலையங்களிலும் புதிய குற்றவியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், நந்தக்குமார் மற்றும் போலீசார் பொது மக்களுக்கு புதிய குற்றவியல் சட்டம் குறித்து விளக்கமளித்தனர்.