ADDED : ஆக 13, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய டி.ஜி.பி.,யாக ஷாலினி சிங் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி காவல்துறையில் டி.ஜி.பி.,யாக பணியாற்றிய ஸ்ரீநிவாஸ் கடந்த மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதையடுத்து, டெல்லியில் பணியாற்றிய ஷாலினி சிங், புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு, போலீஸ் துறை உயரதிகாரிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக, அவருக்கு காவல்துறை தலைமை அலுவலகத்தில் போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், பொறுப்பேற்ற பின், டி.ஜி.பி., ஷாலினி சிங், கவர்னர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார்.

