தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நம்பர் பிளேட் இன்றி இயக்கப்படும் பி.ஆர்.டி.சி., புதிய இ -பஸ்கள்

நம்பர் பிளேட் இன்றி இயக்கப்படும் பி.ஆர்.டி.சி., புதிய இ -பஸ்கள்

நம்பர் பிளேட் இன்றி இயக்கப்படும் பி.ஆர்.டி.சி., புதிய இ -பஸ்கள்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பாக பி.ஆர்.டி.சி., மூலம் பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரானிக் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை கண்காணிப்பு கீழ் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக வாங்கப்பட்ட இ பஸ் ஒன்று புதுச்சேரி போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்படாமல் நம்பர் பிளேட் இன்றி இயக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நம்பர் பிளேட் இல்லாத இ பஸ் பயணிகளை ஏற்றிச் கொண்டு புதுச்சேரியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறது.

பச்சை நிறப் பலகை மட்டுமே பொருத்தப்பட்டு, பதிவு எண்கள் ஏதும் இல்லாமல் இயக்கப்படும் இந்த அரசு இ–பஸ்சை கண்டு பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமும் புதுச்சேரியில் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யும் வாகனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்துத் துறை அதிகாரிகள், இப்போது நம்பர் பிளேட் இல்லாத அரசு பஸ் இயங்குவதை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்

ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் இந்தச் சட்டவிரோத இ.பஸ்சை எப்படி அடையாளம் காண்பது? பயணிகள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கி, விதிமுறைகளை மீறி இயங்கும் இந்த இ.பஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us