புதுச்சேரி ரயில் நிலையத்தில் ஜிப்மர் துாய்மைப் பணி
புதுச்சேரி ரயில் நிலையத்தில் ஜிப்மர் துாய்மைப் பணி
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:27 PM

புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் ஜிப்மர் சார்பில் தீவிர துாய்மை பணி நடந்தது.
துாய்மை இந்தியா சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்றாக என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, ஜிப்மர் மருத்துவமனை சார்பில் புதுச்சேரி ரயில் நிலையத்தில் துாய்மைப் பணி நடந்தது.
ஜிப்மர் சுகாதார தூய்மைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரார்த்தனா அனைவரையும் வரவேற்றார். துாய்மை பணியை சிறப்பு விருந்தினர் சபாநாயகர் அன்பழகன் துவக்கி வைத்தார். ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் சாகா வினோத் குமார், துணை இயக்குநர் கேசவன், டாக்டர் ரவி குமார் சிட்டோரியா மற்றும் புதுச்சேரி ரயில் நிலைய மேலாளர் சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இத்துாய்மை இயக்கத்தில் ஜிப்மர் ஊழியர்கள், மாணவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர். புதுச்சேரி ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையை ஒட்டியுள்ள முழுப் பகுதியையும் துப்புரவு செய்து மீட்டெடுத்தனர்.
துாய்மையைப் பேணுவது ஒவ்வொரு குடிமகனின் கூட்டுப் பொறுப்பு என ரயில் பயணிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
