ADDED : செப் 09, 2024 05:00 AM

புதுச்சேரி: புதிய ஜூப்பிடர் அறிமுக விழா சன்வே ஓட்டலில் நடந்தது.
விழாவிற்கு, ஜே.கே. டி.வி.எஸ்., மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன், டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி பிராந்திய மேலாளர் அரவிந்த், முன்னாள் போக்குவரத்து ஆணையர் பன்னீர்செல்வம் மற்றும் ரங்கன், டூவீலர் பழுது நீக்கும் சங்கத் தலைவர் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய ஜூபிட்டர் 110 ஸ்கூட்டரின் தோற்றத்தில் பயணிகளின் சவுகரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ரைடர் சவுகரியமாக அமர்வதற்கு ஏதுவாக ஹேண்டில் பாரின் பொசிஷன் உள்ளது. உயரமாக இருந்தாலும் சவுகரியமாக அமரும் வகையில், குறிப்பிட்ட உயரத்தில் ரைடர் இருக்கை உள்ளது.
ஹேண்டில்பாரில் வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் வண்ண எல்.சி.டி., ஸ்பீடோமீட்டர் திரை மூலம் ஸ்மார்ட் அலார்ட்ஸ், ரியல்-டைம் மைலேஜ் இண்டிகேட்டர்ஸ் உள்ளிட்ட தேவையான விபரங்களை ரைடர் பெறலாம்.
பெட்ரோல் நிரப்பும் பகுதி ஸ்கூட்டருக்கு முன்பக்கத்தில் உள்ளது. ஹேண்டில் பாருக்கு கீழ், க்ளோவ் பாக்ஸ், யு.எஸ்.பி., மொபைல் போன் சார்ஜர், இ-இசட் சென்டர் ஸ்டாண்ட், எல்.இ.டி. ஹெட்லேம்ப் உள்ளிட்டவை புதிய ஜூபிட்டர் 110 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன.
2024 ஜூபிட்டர் 110 ஸ்கூட்டரில் 113.3 சிசி, சிங்கிள் - சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 6,500 ஆர்.பி.எம்., வேகத்தில் 5.9 கிலோவாட்ஸ் மற்றும் 5,000 ஆர்.பி.எம்., வேகத்தில் 9.8 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.
இதில் உள்ள ஐகோ அசிஸ்ட் தொழில்நுட்பம் முன்பு விற்பனையில் இருந்த ஜூபிட்டர் ஸ்கூட்டரை விட 10 சதவீதம் கூடுதல் மைலேஜ் வழங்குகிறது என, ஜே.கே.டி.வி.எஸ்., மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.