/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய பென்ஷன் திட்டம் பேராசிரியர்கள் கோரிக்கை
/
புதிய பென்ஷன் திட்டம் பேராசிரியர்கள் கோரிக்கை
ADDED : செப் 11, 2024 11:27 PM

புதுச்சேரி : புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, சொசைட்டி கல்லுாரி பேராசிரியர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லுாரி பேராசிரியர்கள், ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ராம்குமார் தலைமையில் நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில், புதுச்சேரியில் கடந்த 40 ஆண்டுகளாக 6 சொசைட்டி கல்லுாரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லுாரிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் உள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 2004ம் ஆண்டிற்கு முன் பணி அமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால், சொசைட்டி கல்லுாரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தாமல் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர். இதனால் ஊழியர்கள் பணி ஓய்வு பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.
எனவே மத்திய அரசின் அறிவிப்பின்படி அரசு ஊழியர்கள், நகராட்சி ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தி உள்ளது போல், சொசைட்டி கல்லுாரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

