sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

78 ஏரி, குளங்களில் இருந்து குடிநீர் வழங்க புதிய திட்டம்: பொதுப்பணித்துறை தீவிர ஆலோசனை

/

78 ஏரி, குளங்களில் இருந்து குடிநீர் வழங்க புதிய திட்டம்: பொதுப்பணித்துறை தீவிர ஆலோசனை

78 ஏரி, குளங்களில் இருந்து குடிநீர் வழங்க புதிய திட்டம்: பொதுப்பணித்துறை தீவிர ஆலோசனை

78 ஏரி, குளங்களில் இருந்து குடிநீர் வழங்க புதிய திட்டம்: பொதுப்பணித்துறை தீவிர ஆலோசனை


ADDED : மார் 05, 2025 04:31 AM

Google News

ADDED : மார் 05, 2025 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரெடியாகி வருகின்றது.

புதுச்சேரியில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நிலத்தடி நீரை பெரிதும் சார்ந்துள்ளது. ஆனால், நிலத்தடி நீரில் அதிகப்படியான டி.டி.எஸ்., உள்ளது. இதனால் நிலத்தடி நீராதாரத்திலிருந்து நதி நீர் ஆதாரத்திற்கு மாற அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் நிலவும் குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க சாத்தனூர் அணையில் இருந்து புதுச்சேரிக்கு குழாய் மூலம் 1.50 டி.எம்.சி., தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

மேலும், தமிழகத்தின் மரக்காணம் பகுதியில் உள்ள கழுவேலி ஏரியில், இருந்து ஒவ்வொரு ஆண்டும் 3 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லுகிறது. இந்த நீரை புதுச்சேரி அரசின் குடிநீர் தேவைக்கு உடனடியாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இது தொடர்பாக அன்மையில் தமிழ் நாடு நீர்வளத் துறை அதிகாரியை, புதுச்சேரி பொதுப்பணித் துறை அதிகாரிகள் சந்தித்து சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் புதுச்சேரியில் உள்ள ஏரி குளங்களில் உள்ள நீர்வளத்தை குடிநீர் திட்டத்திற்கு பயன்படுத்த பொதுப்பணித் துறை ரெடியாகி வருகின்றது.

புதுச்சேரியில் மொத்தம் 84 ஏரி குளங்கள் உள்ளன. இதில் 78 ஏரி, குளங்களில் குடி நீர் திட்டத்தை செயல்படுத்த ஆலோசித்து வருகின்றது. மொத்தமுள்ள 84 ஏரி, குளங்களில், 55 ஏரிகள், ஆற்று வாய்க்கால் மூலம் தண்ணீர் பெற்று நிரம்பி , அதன் உபரி நீர் அடுத்த ஏரிக்கு செல்லுகின்றன. மற்ற 29 ஏரிகள் அப்பகுதியில் கிடைக்கும் மழை தண்ணீரை மட்டுமே நம்பியுள்ளன. இதில் முதற்கட்டமாக ஆற்று வாய்க்கால், ஏரி வாய்க்கால் மூலம் தண்ணீர் பெறும் 55 ஏரிகளை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி அதிக நீரை தேக்கி வைக்கும் புது திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

புதுச்சேரிக்கு தற்போது 120 எம்.எல்.டி., தண்ணீர் தேவைப்படுகின்றது. இதில் பாதியளவிற்கு எம்.எல்.டி., ஏரி, குளங்களில் இருந்த சமாளிக்கலாம் என்பதே புதுச்சேரி அரசின் கணக்காக உள்ளது. இருப்பினும், இந்த திட்டத்தில் பல்வேறு சவால்களும், இடர்பாடுகள் உள்ளன. குறிப்பாக அந்த காலத்தில் மனிதன், கால்நடைகளின் தாகம் தணித்த ஏரி, குளங்கள் அனைத்தும் போதிய பராமரிப்பின்றி இன்றைக்கு கழிவு நீர் தொட்டியாகிவிட்டது. குப்பைகள்.

அந்தந்த பகுதிகளில் உள்ள வீட்டு கழிவுகள் அனைத்து இப்போது, குளங்கள், ஏரிகளில் தான் விடப்படுகின்றது. கட்டட இடிபாடுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இத்திட்டம் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே வெற்றிப்பெறும். எனவே பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ள பொதுப்பணித் துறை, ஏரி, குளம் குடிநீர் திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகளில் மும்முரமாக மூழ்கியுள்ளது.

50 எம்.எல்.டி., பூர்த்தி செய்யும்

பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் கூறுகையில், முதல்வர், பொதுப்பணித் துறை அமைச்சர் உத்தரவின்பேரில் 78 ஏரி குளங்களில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக திட்ட அறிக்கை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரிக்கு 120 எம்.எல்.டி,. குடிநீர் தேவைப்படுகின்ற சூழ்நிலையில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது 50 எம்.எல்.டி., வரை குடிநீருக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் என்றார்.








      Dinamalar
      Follow us