/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நியூபெர்க் டயக்னோஸ்டிக்ஸ் மையம்; முதல்வர் ரங்கசாமி திறப்பு
/
நியூபெர்க் டயக்னோஸ்டிக்ஸ் மையம்; முதல்வர் ரங்கசாமி திறப்பு
நியூபெர்க் டயக்னோஸ்டிக்ஸ் மையம்; முதல்வர் ரங்கசாமி திறப்பு
நியூபெர்க் டயக்னோஸ்டிக்ஸ் மையம்; முதல்வர் ரங்கசாமி திறப்பு
ADDED : ஆக 03, 2024 04:35 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நியூபெர்க் டயக்னோஸ்டிக்ஸ் நவீன ரீஜனரல் ரெபரன்ஸ் ஆய்வகம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பு மையத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், புதுச்சேரியில் நவீன ரீஜனல் ரெபரன்ஸ் ஆய்வகம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பு மையத்தை துவக்கி உள்ளது. இந்த மையத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று திறந்து வைத்தார்.
இதன் திறப்பு விழாவில், அமைச்சர் லட்சுமி நாராயணன், நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவன தலைவர் வேலு, புதுச்சேரி நலம் கிளினிக் தலைவர்நலம் வெங்கட்ராமையா, துணை பிரெஞ்சுதுாதர்ஜான் பிலிப், ஐ.டி ஆலோசகர்சரவணன் சுந்தரமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, அல்ட்ரா சோனோகிராம்கள், இமேஜ் கைடெட் இண்டர்வென்ஷன், ஈ.சி.ஜி., எக்கோ, கார்டியோகிராம், பயோகெமிஸ்ட்ரி, ஹமடாஜலி, செரோலாஜி ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.
நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவன தலைவர் வேலு கூறுகையில், 'தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ராய்ப்பூர், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் எங்களிடம், 11 ஒருங்கிணைந்த மையங்கள் உள்ளன. மேலும், இது எங்களின், 12வது ஒருங்கிணைந்த நோயறிதல் மையமாக இருக்கும்.