ADDED : ஜூன் 05, 2026 10:44 PM
புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழிமையம் சார்பில் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கான புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சோம்பட்டு ஏரிக்கரையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு நலவழி மையத்தின் பொறுப்பு மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணியன் தலைமை தாங்கி, நிகோடின் மற்றும் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கம் அளித்தார்.
காசநோய் சுகாதார பார்வையாளர் பொற்கிலை, புகையிலை பொருட்கள் மற்றும் புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்கள், புகையிலையால் ஏற்படும் காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கிராம திட்ட ஊழியர் சக்திவேல், புகையிலை பொருட்கள் இல்லாத கிராமத்தை உருவாக்க, மக்களின் பங்கு குறித்து பேசினார். சுகாதார ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை மகப்பேறு உதவியாளர்கள் ராஜவள்ளி, ஐஸ்வர்யா, சூர்யபிரியா, சுகாதார உதவியாளர் சந்தோஷ்குமார் மற்றும் ஆஷா பணியாளர்கள் செய்திருந்தனர்.
