/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
/
சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
ADDED : ஏப் 11, 2024 03:54 AM
அ.தி.மு.க., நிர்வாகிகள் உற்சாகப் பணி
புதுச்சேரி: லோக்சபா தேர்தல் பிரசாரத்திலே, சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க., அறிவித்து தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து மாநில செயலாளர் அன்பழகன், ஒவ்வொரு தொகுதியாக பிரசாரத்திற்கு செல்லும்போது, அத்தொகுதியின் செயலாளர், தலைவர்களை பிரசார வாகனத்தில் ஏற்றி, வரும் 2026 சட்டசபை தேர்தலில் இவர் தான் வேட்பாளர் என அறிமுகப்படுத்தி வருகிறார்.
இதனால், எம்.எல்.ஏ., கனவுடன் வலம் வரும் கட்சி நிர்வாகிகள் குஷி அடைந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்பாளர் என அறிவித்து விட்டதால், லோக்சபா தேர்தலில் தன் தொகுதியில் அ.தி.மு.க., ஓட்டுக்களை பெற்று காண்பித்தால் தான் சட்டசபை தேர்தலின்போது தனது பெயர் வேட்பாளராக உறுதி செய்யப்படும் என்பதால், அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிரமாக ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட துவங்கி உள்ளனர்.

