/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் ரங்கசாமியை விமர்சித்த மாஜி எம்.பி.,க்கு என்.ஆர்.காங்., பதிலடி

ADDED : மே 30, 2024 04:53 AM
புதுச்சேரி: முதல்வரை விமர்சித்த முன்னாள் எம்.பி., ராமதாசுக்கு, என்.ஆர்.காங்., பதில் அளித்துள்ளது.
என்.ஆர்.காங்., செய்தி தொடர்பாளர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் ரங்கசாமி, இந்திய கடற்படை அதிகாரியிடம் காரைக்கால் மீனவர்களை பாதுகாக்கவும், நிதி அயோக் அதிகாரிகளிடம் மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்தியதையும் முன்னாள் எம்.பி., ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசிடம் மட்டுமே வலியுறுத்த வேண்டும் என, கண்டறிந்துள்ளார். மெத்த படித்தவர்கள் தங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் குவிப்பர். ஆனால் கள பணியாளரான முதல்வர் ரங்கசாமி, தனக்கு கிடைக்கும் சிறிய சந்தர்ப்பங்களையும் அதற்காக பயன்படுத்தி, 4 வழிகளிலும் தேட கூடியவர். புதுச்சேரி மீனவர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினாரே தவிர இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த கூறவில்லை.
நிதி அயோக் அதிகாரிகளிடம் முதல்வர் ரங்கசாமி முன் வைத்த மாநில அந்தஸ்து கோரிக்கை, அதிகாரிகளின் குறிப்புகளில் இடம்பெறும்.
எதிர்காலத்தில் மாநில அந்தஸ்து முன்னெடுப்பை மத்திய அரசு எடுக்கிறபோது, நிதி அயோக் அதிகாரிகளின் குறிப்பு அதற்கு வலு சேர்க்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.