/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., பிரமுகர் காங்., கட்சியில் ஐக்கியம்
/
என்.ஆர்.காங்., பிரமுகர் காங்., கட்சியில் ஐக்கியம்
ADDED : மார் 04, 2025 04:41 AM

புதுச்சேரி: என்.ஆர்.காங்., பிரமுகர் வக்கீல் குமரன் ஆதரவாளர்களுடன் காங்., கட்சியில் இணைந்தார்.
ராஜ்பவன் தொகுதி என்.ஆர்.காங்., பொறுப்பாளர் குமரன், அமைச்சர் லட்சுமி நாராயணனின் தீவிர ஆதரவாளர். இவர், காங்., கட்சியில் இணைய முடிவு செய்தார்.
அவர், ராஜ்பவன் தொகுதியில் தனது ஆதரவாளர்களுடன், கடற்கரை சாலை அருகிலிருந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க தொகுதியில் வீதி, வீதியாக நடந்து வலம் வந்தார்.
பின்னர் செட்டி தெருவில் உள்ள காங்., தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மலர் துாவி காங்., கட்சியினர் அவரை வரவேற்றனர். மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில் காங்., கட்சியில் குமரன் இணைந்தார்.
அவர், கூறுகையில், 'காங்., மக்களின் கோரிக்கைளை நிறைவேற்றும் கட்சி. இதற்கு சாட்சியாக கடந்த காலங்களில் மக்கள் திட்டங்களை காங்., கட்சி நிறைவேற்றியுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் காங்., கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்' என்றார்.அவருக்கு, மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.