ADDED : ஜூலை 04, 2024 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்ட துவக்க விழா நடந்தது.
பள்ளி துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ் விரிவுரையாளர் பரமேஸ்வரி வரவேற்றார். பொறுப்பாசிரியை லோகேஸ்வரி வாழ்த்துரை வழங்கினார். மாநில நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆங்கில விரிவுரையாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.