ADDED : ஜூலை 11, 2024 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி கிராமத்தில் ஓம் சக்தி அம்மன் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில் உள்ள அகத்தியர் முதலானோர் உருவச்சிலைகளின் முன்பாக, சித்தர் ஆறுமுகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, உலக நன்மைக்காக சித்தர் முறை யாகமும், அபிேஷக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, அருட்பெருஞ்சோதியான கூடத்தில், முன்னாள் துணை கலெக்டர் கமலக்கண்ணன் எழுதி, வானதி பதிப்பகம் வெளியிட்ட, 48வது நுாலான, 'திருவள்ளுவர் வரலாற்று சுருக்கம்' நுால் வெளியிடப்பட்டது. இந்த விழாவில், சந்தானலட்சுமி மகா மந்திரம் கூறி தீபம் ஏற்ற, சிவக்குமார் வரவேற்றார்.
டாக்டர் ஜோதிகுமார் நுாலின் முதல் பிரதியை வெளியிட, சசிகரன் மணிவாசகர் பெற்றுக்கொண்டார். மகேந்திரன் ஆய்வுரை, அண்ணாமலை இணைப்புரை நிகழ்த்தினர். நுாலாசிரியர் கமலக்கண்ணன் ஆசியுரை வழங்கினார்.