நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பிரஞ்சிந்திய வரலாற்று தடயங்கள் நுால் அறிமுக விழா நடந்தது.
நல்லாம் மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித் துறை முன்னாள் இணை இயக்குனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இளங்கோவன் வரவேற்றார். முனைவர் இளங்கோ நுாலினை திறனாய்வு செய்தார். பேராசிரியர் ஆரோக்கியநதான், பூங்கொடி பராங்குசம் வாழ்த்தி பேசினர்.
நுாலாசிரியர் ராசசெல்வம் ஏற்புரையாற்றினார். கோபிராமன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் ராஜ்ஜா, ராமன், எழுத்தாளர் முருகேசன், சடகோபன், தேவி திருவளவன், இளமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.