/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபையில் நுால் வெளியீட்டு விழா
/
சட்டசபையில் நுால் வெளியீட்டு விழா
ADDED : ஆக 31, 2024 02:19 AM

புதுச்சேரி: சட்டசபையில் பிரஞ்சிந்திய வரலாற்று தடயங்கள் நுால் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி வரலாற்று ஆய்வாளர் ராசசெல்வம் எழுதிய பிரஞ்சிந்திய வரலாற்று தடயங்கள் என்னும் நுால் வெளியீட்டு விழா சட்டசபை முதல்வர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். முதல்வர் ரங்கசாமி நுாலினை வெளியிட கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் பெற்றுக்கொண்டார்.
பிரஞ்சியர் கால புதுச்சேரியின் நினைவு சின்னங்களாக உள்ளவற்றறை வரலாற்று தடயங்களாக விளக்கியுள்ள நுாலாசிரியரை பாராட்டினார். நுாலாசிரியர் ராசசெல்வம் ஏற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் வளர்மதிராசசெல்வம், கல்வெட்டு ஆய்வாளர் வெங்கடேசன், பேராசிரியர்கள் ராமன், இளங்கோ, எழுத்தாளர்கள் சிங்காரவேலு, இளங்கோவன், ராமணிபூபதி, சடகோபன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.