/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கனரா வங்கி சார்பில் செவிலியர் தினவிழா
/
கனரா வங்கி சார்பில் செவிலியர் தினவிழா
ADDED : மே 14, 2024 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: செவிலியர்கள் தினத்தையொட்டி, கனரா வங்கி சார்பில் வெஸ்ட்மெட் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி கனரா வங்கி சார்பில், செவிலியர்கள் தினம், இ.சி.ஆர்., வெஸ்ட்மெட் மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கனரா வங்கி மண்டல மேலாளர் சுதர்சன்ரெட்டி தலைமையில், மருத்துவமனையில் பணிபுரியும், தலைமை செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து செவிலியர்களுக்கும் சால்வை அணிவித்து, வாழ்த்தி கவுரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், துணை பொது மேலாளர் சதிஷ்குமார், மேலாளர் பரத் உட்பட வங்கி ஊழியர்கள். மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

