ADDED : செப் 15, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
முத்திரப்பாளையம் கோவிந்தன்பேட் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு மகன் அஜய் செல்வா 24, பி.எஸ்.சி., நர்சிங் முடித்து விட்டு, பொறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர் அதிகாரியாக பணி செய்து வருகிறார்.
இவர் கடந்த 8ம் தேதி வீட்டி லிருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வேலைக்கு செல்ல வில்லை, வீட்டிற்கும் வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து வடிவேலு அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.