ADDED : பிப் 28, 2025 04:42 AM

புதுச்சேரி: அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் நல வளர்ச்சி திட்டம் சார்பில், நெல்லித்தோப்பு பெரியார் நகர் மகாத்மா காந்தி அரசு உயர்நிலை பள்ளியில், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அதிகாரி அமலாபவன்மேரி தலைமை தாங்கினார்.தலைமை ஆசிரியை ஜான்சி முன்னிலை வகித்தார்.முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மேரிஜாக்லின், செவிலியர்கள் ஷீலா, விஜயலட்சுமி ஆகியோர், ஊட்டச்சத்து குறித்து சிறப்புரையாற்றினர்.
குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஆதார் பதிவு செய்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவு வகைகள் மற்றும் அதன் அவசியம் குறித்தும், தாய்ப்பாலின் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய உணவு வகைகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.