/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 05, 2025 04:50 AM

புதுச்சேரி: பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் கழகம் சார்பில், மாணவர்களுக்கு சுகாதார மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ் விரிவுரையாளர் சவுரிராஜன் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சுதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பாகூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவர் பிரசன்னா கலந்து கொண்டு, மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்தும், ஆரோக்கியமான வாழ்விற்கு ஊட்டச்சத்து அவசியம், மாணவர்கள் போதையின் பிடியில் சிக்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினார்.
இயற்பியல் விரிவுரையாளர் சந்திரமோகன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை விரிவுரையாளர் தனுசு, உடற்கல்வி ஆசிரியை சந்தியா ஆகியோர் செய்திருந்தனர்.