/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் பாரபட்சம்: காட்டுவதாக குற்றச்சாட்டு
/
பாகூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் பாரபட்சம்: காட்டுவதாக குற்றச்சாட்டு
பாகூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் பாரபட்சம்: காட்டுவதாக குற்றச்சாட்டு
பாகூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் பாரபட்சம்: காட்டுவதாக குற்றச்சாட்டு
ADDED : மே 30, 2024 10:58 PM

பாகூர்: பாகூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாகூரில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் வீடுகளால் போக்குவரத்து பாதிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 10ம் தேதி வருவாய், பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், பாகூர் கடை வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட சென்றனர்.
வியாபாரிகள் கால அவகாசம் கேட்டதால், ஆக்கிரமிப்பு அகற்றம் பணி ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பிறகு, கடந்த 22ம் தேதி, சப் கலெக்டர் சோம சேகர் அப்பராவ் கோட்டாரு தலைமையில், அதிகாரிகள் பாகூர் நகர வீதியில் ஆய்வு மேற்கொண்டு ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். இல்லையெனில், பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தப்படும் என எச்சரித்தனர்.
இதையடுத்து, வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்பு பகுதியை இடித்து அப்புறப்படுத்தினர். இருப்பினும், பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் இருந்து வந்தது.
நேற்று காலை பாகூர் தாசில்தார் கோபாலக் கிருஷ் ணன் தலைமையில் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியை, சப் கலெக்டர் சோம சேகர் அப்பராவ் கோட்டாரு பார்வையிட்டார்.
அப்போது, ஒரு தரப்பினர், 'ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக வியாபாரிகளுக்கு மட்டுமே நோட்டீஸ் வழங்கப்பட்டது. குடியிருப்பு வாசிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், திடீரென இடித்து அப்புறப்படுத்துவது சரியல்ல' என்றனர்.
மற்றொறு தரப்பினர், கழிவு நீர் வாய்க்காலின் மீதுள்ள ஆக்கிரமிப்பு படிக்கட்டுகள் மட்டுமே அகற்றப்படுகிறது. கட்டங்களின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போர்டிகோ, தகர ஷீட் ெஷட்டுகள் அப்படியே உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் பார்ப்பதாக கூறி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.