/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பதவியில் இருக்கும் அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகம் கிடுக்கிப்பிடி

ADDED : மே 20, 2024 04:04 AM
புதுச்சேரி : மூன்று ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய பதவிகளில் வகிக்கும் அதிகாரிகள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணி அமர்த்த கூடாது. 3 ஆண்டுகளுக்கொரு முறை இடமாற்றம் செய்ய வேண்டும். ஆனால் புதுச்சேரி அரசு துறைகளில் முக்கிய பதவிகளை நீண்ட காலமாக சில அதிகாரிகள் பணியில் இருப்பதாக தொடர்ந்து டில்லியில் உள்ள மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு புகார் சென்றது.
அதையடுத்து புதுச்சேரியில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய பதவிகளில் வகிக்கும் அதிகாரிகள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
இதனையடுத்து அரசின் சார்பு செயலர் கண்ணன் அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பி, தகவல்களை கேட்டுள்ளார். அந்த சுற்றிக்கையில், மத்திய அரசின் உத்தரவின்படி இடமாற்றல் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
எனவே முக்கிய பதவிகளில் 3 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அதிகாரிகள்,ஊழியர்கள் பட்டியலை தர வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் இறுதி வேலை நாளில் மாதாந்திர அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
இதனை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.எனவே இதற்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து துறைகளும் அனுப்பி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினால் அரசு துறைகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.