நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி புதுசாரம் சுந்தரமூர்த்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன், 61; இவர், கண் நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால், அவதிப்பட்ட அவர், தூக்க மாத்திரை போட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக, வீட்டில் இருந்தவர்களிடம் அடிக்கடி மிரட்டி வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, மாடிக்கு சென்ற அவர், புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். லாஸ்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.