/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெயிலின் கொடுமையால் 'ஏ.டி.எம்'ல் துாங்கிய முதியவர்
/
வெயிலின் கொடுமையால் 'ஏ.டி.எம்'ல் துாங்கிய முதியவர்
வெயிலின் கொடுமையால் 'ஏ.டி.எம்'ல் துாங்கிய முதியவர்
வெயிலின் கொடுமையால் 'ஏ.டி.எம்'ல் துாங்கிய முதியவர்
ADDED : மே 03, 2024 06:30 AM
புதுச்சேரி : வெயில் கொடுமையால் ஏ.டி.எம்., மையத்தில் துாங்கிய முதியவரின் வீடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி ரயில் நிலையம் வெளியே அரசு மற்றும் தனியார் வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று மதியம் 67 வயது முதியவர் ஒருவர் ஏ.டி.எம்., மையத்திற்குள் சென்று படுத்து துாங்கினார்.
அங்கு பணம் எடுக்க சென்றவர்கள் இதனை பார்த்துவிட்டு, ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் ஏ.டி.எம்.,ல் துாங்கிய முதியவரை போலீசார் எழுப்பி விசாரித்தனர்.
அவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், சாலையோரங்களில் படுத்து துாங்கி வருவதும், சுட்டேரிக்கும் வெயிலின் கொடுமையால், குளிர்ச்சியாக இருந்த ஏ.டி.எம்., மையத்தில் வந்து படுத்து கொண்டதாக போலீசாரிடம் கூலாக தெரிவித்தார்.
இங்கு படுக்கக் கூடாது என, அந்த முதியவரை அங்கிருந்து போலீசார் அனுப்பி வைத்தார். இதனிடையே ஏ.டி.எம்., மையத்தில் முதியவர் படுத்து துாங்கும் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.