
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் அருகே காணாமல் போன முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகூர் அடுத்த அரங்கனுார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளையன், 78. இவர் கடந்த 13ம் தேதி இரவு உணவு சாப்பிட்டு துாங்கினார். மறுநாள் காலை அவரது மனைவி எழுந்து பார்த்தபோது, அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல் போன வெள்ளையனை தேடி வருகின்றனர்.
வெள்ளையன் காணாமல் போன அன்று வெள்ளை நிற அரைக்கை சட்டை, நீல நிற லுங்கி அணிந்திருந்தார். இவரை பற்றி தகவல் தெரிந்தால், 0413 - 2633431 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

