ADDED : ஏப் 28, 2024 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் :  ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற மூதாட்டி, முதலை கடித்து காயமடைந்தார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த கொள்ளிடக்கரையோரம் உள்ள நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மா,70; இவர், நேற்று மாலை 4:00 மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக ஆற்றங்கரையோரம் ஓட்டி சென்றார்.
அப்போது ஆற்றங்கரையில் படுத்திருந்த முதலை ஒன்று திடீரென, சின்னம்மா காலை கடித்து குதறியது. படுகாயமடைந்த சின்னம்மா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

