ADDED : ஜூலை 03, 2024 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் சர்வதேச ஒலிம்பிக் தின விழா மற்றும் பாரிஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் 2024 போட்டியில் பங்கு பெற உள்ள இந்திய வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் 'சீர் பார் இந்தியா' நிகழ்ச்சி லாஸ்பேட்டை உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம்,ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவரும், வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஒலிம்பிக் சங்க கொடியை ஏற்றி வைத்து, தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில், ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் தனசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.