/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிக்னல்களில் பசுமை பந்தல் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
/
சிக்னல்களில் பசுமை பந்தல் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
சிக்னல்களில் பசுமை பந்தல் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
சிக்னல்களில் பசுமை பந்தல் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
ADDED : மார் 08, 2025 04:12 AM
புதுச்சேரி : வெயில் காலம் துவங்குவதால், புதுச்சேரி சிக்னல்களில், பொதுப்பணித்துறையினர், பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
புதுச்சேரியில் இரவு நேரங்களில் பனிப்பொழிவும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதங்களில் வாகன ஓட்டிகளை வெப்பத்தில் இருந்து காக்க பசுமை பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம். வரும் இரண்டு, மூன்று நாட்களுக்கு வெப்பம் அதிகரித்து இருக்கும் என கூறியள்ளது. வெயில் காரணமாக சிரமங்களை தடுக்க, பொதுப்பணித்துறை சார்பில் அனைத்து முக்கிய சிக்னல்களிலும் பசுமை பந்தல்கள் அமைக்க வேண்டும்.
பசுமை பந்தல்கள் உறுதியாக உள்ளதா என்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பசுமை பந்தல் அமைக்கும் விவகாரத்தில், முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.