/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை தேர்தலுக்கு முன் ஒன்றிணைந்து விடுவோம் ஓம்சக்தி சேகர் பேச்சு

ADDED : பிப் 25, 2025 05:03 AM

புதுச்சேரி: புதுச்சேரி அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கினார். எல்லை பிள்ளைசாவடியில் அமைந்துள்ள ஜெ., சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிர்வாகிகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில், ஜெ., படத்திற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் மரியாதை செலுத்தி, பேசியதாவது;
தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. தமிழக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது போன்ற சூழலில் கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
கட்சியை பலப்படுத்தி தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும். துரோகிகள் என்று கட்சியில் அனைத்து சுகங்களையும் அனுபவித்து தி.மு.க., விற்கு சென்ற ஒரு சிலரையே பழனிசாமி கூறியுள்ளார். ஜெ., விசுவாசிகளை அதுபோல் அவர் கூற முடியாது. சட்டசபை தேர்தலுக்கு முன், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து விடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.