/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரான்ஸ் வாழ் வில்லியனுார் மக்கள் சார்பில் விளையாட்டு மைதானத்திற்கு மின் விளக்கு வசதி

ADDED : ஆக 29, 2024 07:15 AM

வில்லியனுார்: பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் வில்லியனுார் மக்கள் நற்பணி மன்றம் சார்பில் கபடி மைதானத்திற்கு மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்தனர்.
வில்லியனுார் மறவர் கபடி கழகம் செயல்பட்டு வருகிறது. ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளாக மறவர் கபடி கழகத்தினர் தினமும் சுந்தரமூர்த்தி வினாயக புரம் மேற்கு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மைதானத்தில் மின் விளக்குகள் இல்லாததால் மாலை நேரங்களில் பயிற்சி பெற வீரர்கள் கஷ்டப்பட்டு வந்தனர்.
கபடி சங்க நிர்வாகிகள் வேண்டுகோளுக்கு இனங்க பிரான்சில் வசிக்கும் வில்லியனுார் மக்கள் நற்பணி மன்றத்தினர் சார்பில் மைதானத்திற்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி மின் விளக்குகளை, மறவர் கபடி சங்க நிர்வாகிகளிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அனந்தசங்கர், ராமன், லுாயிஸ்சேகர், வேணுமதி, ரஜினிமுருகன், சுரேஷ், பாஸ்கர் மற்றும் கபடி வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.