ADDED : ஜூலை 27, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
: புதுச்சேரி: அங்காள பரமேஸ்வரி கோவிலில் வரும் 9ம் தேதி ஏக தின லட்சார்ச்சனை நடக்கிறது.
புதுச்சேரி சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் 45ம் ஆண்டு விழாவையொட்டி, வரும் 9ம் தேதி காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஏக தின லட்சார்ச்சனை நடக்கிறது.
லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெறலாம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
