ADDED : ஜூலை 29, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
திருபுவனை: மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரியில் தமிழ் துறையின் சார்பில், ‘பழந்தமிழ் எழுத்துகள் தமிழில் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் லெப்டினன்ட் கதிர்வேல் குத்து விளக்கேற்றி பயிலரங்கை தொடங்கி வைத்தார். பழந்தமிழ் எழுத்துகளின் வரலாறு, அவற்றின் வளர்ச்சி மற்றும் பயன்பாடு குறித்தும் ஐந்தாம் வகுப்பு மாணவி நேயஸ்ரீ பண்டைய தமிழில் பயன்படுத்தப்பட்ட குறியீடுகள் மற்றும் எழுத்து வடிவங்கள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் முனைவர் ஸ்ரீதர், துறை தலைவர்கள் விவேகானந்ததாசன், ராஜ்மோகன், பேராசிரியர்கள் பெருமாள், சாபுதங்கப்பன், மேரிஜிடி , இந்திரா உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர் லட்சுமிபதி நன்றி கூறினார்.
