/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூன்றில் ஒரு பங்கு போலீசாருக்கு ரோந்து பணி; டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் உத்தரவு
/
மூன்றில் ஒரு பங்கு போலீசாருக்கு ரோந்து பணி; டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் உத்தரவு
மூன்றில் ஒரு பங்கு போலீசாருக்கு ரோந்து பணி; டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் உத்தரவு
மூன்றில் ஒரு பங்கு போலீசாருக்கு ரோந்து பணி; டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் உத்தரவு
ADDED : பிப் 22, 2025 10:41 PM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடந்தது. டி.ஐ.ஜி. சத்யசுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
பின்பு டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் கூறியதாவது; பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. குற்ற வழக்குகளை மட்டுமே போலீஸ் பார்க்கிறது. சிவில் சம்பந்தமான புகார்கள் வருவாய் துறை, சிவில் நீதிமன்றம் அணுகுமாறு அறிவுறுத்துகிறோம். சைபர் கிரைம், போக்குவரத்து போலீஸ் நிலையத்திலும் பொதுமக்கள் தீர்ப்பு முகாம் நடக்கிறது.
பொதுமக்களிடம் குறைகளை கேட்டாலே பாதி குறை தீர்ந்து விடும் என்ற அடிப்படையில் குறைகளை கேட்கிறோம்.அனைத்து தரப்பு மக்களும் குறைகளை தெரிவிக்க வருகின்றனர்.
ரோந்து பணியில் குறை, போதை பொருள் விற்பனை, போலீஸ் நடவடிக்கையில் குறைபாடு உள்ளிட்ட தகவல்களை தெரிவித்து செல்கின்றனர்.
வரும் 24ம் தேதி மக்கள் மன்றம் என்ற திட்டம் துவக்கப்பட உள்ளது. மக்களை நாம் தேடி போக வேண்டும் என்பதிற்காக செய்கிறோம்.
புதுச்சேரியில் நடந்த 3 கொலை சம்பவத்திற்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததா என விசாரணை நடத்தப்படும். இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.
கடந்த 10 நாட்களாக ரோந்து பணி இரட்டிப்பாக்கி உள்ளோம்.
ஸ்டேஷனில் உள்ள மொத்த போலீசில் மூன்றில் ஒரு பங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் டாப் 10 குற்றவாளிகளை கண்காணிக்க போலீஸ் அதிகாரிகளை இணைத்து ஆப்ரேஷன் வேட்டை துவங்கி உள்ளோம். அமைதியான புதுச்சேரியை அதே வழியில் கொண்டு செல்ல போலீஸ் எல்லாவிதமான முயற்சிகளை கண்டிப்பாக எடுக்கும்' என்றார்.

