/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மூன்று பேரிடம் ரூ.8.90 லட்சம் ஆன்லைன் மோசடி
/
புதுச்சேரியில் மூன்று பேரிடம் ரூ.8.90 லட்சம் ஆன்லைன் மோசடி
புதுச்சேரியில் மூன்று பேரிடம் ரூ.8.90 லட்சம் ஆன்லைன் மோசடி
புதுச்சேரியில் மூன்று பேரிடம் ரூ.8.90 லட்சம் ஆன்லைன் மோசடி
ADDED : ஏப் 29, 2024 04:16 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் மூன்று பேரில் ரூ. 8 லட்சத்து 90 ஆயிரம் வரை ஆன்லைன் மோசடியில் ஈடுப்பட்ட கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய பால்ராஜ் ரூ. 7 லட்சத்து 95 ஆயிரம் பணத்தை ஆன்லைனில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்துள்ளார்.
இதேபோல் புதுச்சேரியைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவருக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வந்த மொபைல் லிங்கை கிளிக் செய்தபோது, அவரை வங்கி கணக்கில் இருந்து ரூ.30,000 எடுக்கப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் சரவணன் என்பவருக்கு குறைந்த வட்டியில் லோன் தருவதாக குறுந்தகவல் வந்துள்ளது. அந்த என்னை தொடர்பு கொண்டு லோன் குறித்து சரவணன் பேசியுள்ளார். பின்னர், லோன் விண்ணப்பிக்க அவரது விவரங்கள், ஆவணங்கள் மற்றும் முன்பணம் செலுத்துமாறு மர்ம நபர் கேட்டுள்ளார். இதனை நம்பி சரவணன் ரூ.69 ஆயிரம் பணத்தை, செலுத்தி உள்ளார்.
பின்னர் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இது குறித்து மூன்று பேரும் தனிதனியாக அளித்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிந்து ஆன்லைன் மோசடி கும்பல் தேடி வருகின்றனர்.

