/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.எப்.டி., மைதானம் புது பஸ் ஸ்டாண்டில் பி.ஆர்.டி.சி., பயணச் சீட்டு முன்பதிவு மையம் திறப்பு

ADDED : ஜூலை 09, 2024 04:11 AM

புதுச்சேரி : ஏ.எப்.டி., புது பஸ்ஸ்டாண்ட்டில் பி.ஆர்.டி.சி., பயணச்சீட்டு முன்பதிவு மையம் திறக்கப்பட்டது.
புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 31 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணிகள்நடந்து வருகிறது. அதையடுத்து, கடந்த 16ம் தேதி முதல் ஏ.எப்.டி.,திடலுக்கு புது பஸ்ஸ்டாண்ட் தற்காலிகமாக மாற்றப்பட்டது.
பயணிகள் நலனுக்காக பி.ஆர்.டி.சி., பயணச்சீட்டு முன்பதிவு மையம் ஏ.எப்.டி., புதிய பஸ்ஸ்டாண்டில் நிலையத்தில் உள்ள ஹைமாஸ் விளக்கு மற்றும் பயணிகள் நிழல் பந்தல் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பி.ஆர்.டி.சி., பயணச்சீட்டு முன்பதிவு மையம் நேற்று திறக்கப்பட்டது.போக்குவரத்து ஆணையரும்,பி.ஆர்.டி.சி.,மேலாண் இயக்குனருமானசிவக்குமார் திறந்து வைத்து முன் பதிவினை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, பி.ஆர்.டி.சி., நிர்வாக பொது மேலாளர் கலியபெருமாள், போக்குவரத்து பொது மேலாளர் முகமது இஸ்மாயில், உதவி மேலாளர்கள் குழந்தைவேல், ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சிவானந்தம்ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் பி.ஆர்.டி.சி., முன்பதிவு மையத்திற்காக, கண்டெய்னர் வழங்கிய செண்பகா கார்ஸ் மேலாண் இயக்குனர் அசோகன், இயக்குனர் சரவணன், பொது மேலாளர் ராஜசேகரன் கவுரவிக்கப்பட்டனர்.
நேரடி முன் பதிவு மட்டுமின்றி, BUS INDIA APP என்ற செயலி வழியாக பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என பி.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது.