தமிழக அரசின் நிர்வாக திறமை இன்மையால் விவசாயிகள் பாதிப்பு: ஆய்வுக்கு பின் நயினார் குற்றச்சாட்டு
தமிழக அரசின் நிர்வாக திறமை இன்மையால் விவசாயிகள் பாதிப்பு: ஆய்வுக்கு பின் நயினார் குற்றச்சாட்டு
UPDATED : அக் 25, 2025 02:29 PM
ADDED : அக் 25, 2025 02:26 PM

தஞ்சாவூர்: '' தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். நெல் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஏராளமான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இதற்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மத்திய அரசு மீது தமிழக உணவுத்துறை அமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
தமிழக அரசு இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக்கில் இவ்வளவு மதுபாட்டில் விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்பட்டது. டாஸ்மாக்கில் காட்டிய அக்கறையை விவசாயிகள் பிரச்னையில் அரசு காட்டவில்லை. தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

