பாமக செயல்தலைவர் பதவியை மகளுக்கு வழங்கினார் ராமதாஸ்
பாமக செயல்தலைவர் பதவியை மகளுக்கு வழங்கினார் ராமதாஸ்
UPDATED : அக் 25, 2025 06:52 PM
ADDED : அக் 25, 2025 02:45 PM

தர்மபுரி: பாமக செயல் தலைவர் பதவியை தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்குவதாக, நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தர்மபுரியில் நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: பெருமைக்குரிய இந்த மண்ணில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். செயல் தலைவர் என்ற பொறுப்பை உருவாக்கினேன். அதற்கு தனக்கு தகுதியில்லை என்று அதனை ஒருவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
செயல் தலைவர் பொறுப்பை பெரிய மகள் ஸ்ரீ காந்திக்கு வழங்குகிறேன். அவர் கட்சியையும் வளர்ப்பார். எனக்கும் பாதுகாப்பாக இருப்பார். அவருக்கு நாம் அனைவரும் வாழ்த்து சொல்வோம்.
பாமக என்பது நான் போட்ட விதை, அன்புமணிக்கும் கட்சிக்கும் என்ன சம்மந்தம் உள்ளது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி கூட்டணியை நான் அமைப்பேன். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

